லோகேஷ் செய்த செய்கையால் எதிர்பார்ப்பு இல்லாமல் போன தளபதி-66 !!

0
28

வம்சி பைடிப்பள்ளியுடன் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில படங்கள் கசிந்தன, மேலும் அவை மூலம் நடிகரின் தோற்றம் தெரியவந்தது. இதனால் தற்போது படப்பிடிப்பை தயாரிப்பாளர்கள் மாற்றியுள்ளனர். ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்தது. விஜய்யின் படங்கள் மற்றும் வீடியோக்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, மேலும் அத்துமீறலுக்கு எதிராக சில நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் படப்பிடிப்பை வேறு ஒரு தனி இடத்திற்கு மாற்றிய தயாரிப்பாளர்கள் தற்போது செட் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் படம் வருவதற்கு முன் மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அப்டேட்ஸ் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி – 66. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து யாரெல்லாம் நடிக்க போகிறார்கள்? என்னென்ன கதாபாத்திரங்கள் என சமூக வலைதளங்களில் தினமும் தகவல்கள் பரிமாறிக் கொண்டு இருந்தன.

ஆனால் விக்ரம் படம் ரிலீஸ் ஆனதில் லோகேஷின் தாக்கம் சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிகமாகி விட்டது. தளபதி-66 படத்தை பற்றிய செய்திகளையே மக்கள் மறந்து விட்டார்கள். இன்னும் சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் விஜயின் அடுத்த படமான தளபதி – 67 படத்தை லோகேஷ் தான் இயக்குகிறார் என தெரிந்தவுடன் தளபதி – 67 படத்தை பற்றிய அப்டேட்ஸ்க்கு ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

மேலும் தளபதி – 66 ஒரு கமெர்ஷியல் படமாக உருவாக இருப்பதால் அதன் மீதுள்ள ஆர்வம் குறைந்து விட்டதா? இல்லை லோகேஷின் மீதுள்ள ஆர்வம் கூடி விட்டதா? என விவாதங்கள் தற்போது இணையத்தில் நடந்து வருகின்றன. என்ன இருந்தாலும் தளபதி – 66 விட அடுத்த படத்தின் ஆர்வத்தை நோக்கி தான் ரசிகர்களின் கவனம் இருக்கிறது என்று அவர்கள் பகிரும் செய்திகளில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.