தினமும் இரவில் நீங்கள் நிம்மதியா தூங்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

0
31

இரவு தூக்கம் என்பது எப்போதுமே நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று பலருக்கு அது கிடைப்பதில்லை.

சிலருக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதுதான். சிலர் என்னதான் சீக்கிரமாகவே படுக்க சென்றாலும் தூக்கம் வரவே வராது. புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழ தேநீர் தயார் செய்து குடிக்கலாம். நல்ல தூக்கத்துடன், இது உடலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது.

அந்தவகையில் இந்த தேநீரை எப்படி தயாரிக்கலாம்? என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

தேவைப்படும் பொருட்கள்
ஒன்றரை கப் தண்ணீர் – 1
வாழைப்பழம் – 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை
தயாரிப்பது எப்படி
வாழைப்பழத்தை கழுவி சுத்தம் செய்து, தோல் உட்பட சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

டீ தயாரிக்க இந்த துண்டுகளை பாத்திரத்தில் போடவும். இதில் ஒரு டீஸ்பூன் (சிறிய ஸ்பூன்) இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும்.

அடுத்து, இதில் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை மிக குறைந்த தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

வாழைப்பழத் தோல் உரியத் தொடங்கியதும், கேஸ் ஸ்டவ்வை அணைக்கவும். இப்போது இந்த டீயை வடிகட்டி, மெதுவாக குடிக்கவும்.

இரவு தூங்கும் போது தூக்கம் கலையாமல் இருக்க தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு குடிப்பதால் நல்ல நன்மைகள் கிடைக்கும்.

ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் இதை செய்யவும். உங்கள் தூக்கம் மற்றும் காலைப்பொழுது இரண்டும் மகிழ்ச்சியாக இருக்கும்.