கமல் மற்றும் பா.ரஞ்சித் இணையும் அடுத்த படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

0
20

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா . முந்தைய காலகட்டத்தில் இருந்த இவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு என்றே கூறலாம். ஒரு ஹீரோவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு இவருக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இப்படி இருக்கையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இதுவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு இசையமைத்ததே இல்லை. இதனால் கமல் ரஜினி படத்துக்கு யுவன் இசையமைப்பார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதனையடுத்து தற்போது கமலுக்கு யுவன் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்ததாக மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார்.அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்க உள்ளார்.

மதுரை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.ஏனெனில் யுவன் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஒரு விழா ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது.

அதில் கலந்து கொண்டு பேசிய பா. ரஞ்சித் ” தான் பெரிய யுவன் ரசிகர் என்றும் அவருடன் இணைந்து ஒரு படம் கண்டிப்பாக பண்ணுவேன் என்றும் உறுதியாக தெரிவித்து இருந்தார். அதை வைத்து பார்க்கையில், கமல் படத்திற்குயுவன் சங்கர் ராஜா இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.