பல கோடி பணத்தை உக்ரைனில் இருந்து எடுத்து கொண்டு தப்பிய பெண்! யார் அவர் ? வைராலாகும் புகைப்படம்

ukraine

சூட்கேசுக்குள் பல கோடிகள் பணத்தை எடுத்து கொண்டு உக்ரைனில் இருந்து தப்பிய முன்னாள் எம்.பி மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய படையினர் கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் போர் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோட்விட்ஸ்கியின் மனைவி, சூட்கேஸ்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 மில்லியன் டொலர்கள் மற்றும் 1.3 மில்லியன் யூரோ பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அந்த பெண் உக்ரைனிலிருந்து வெளியேறி ஜகார்பட்டியா மாகாணம் வழியாக ஹங்கேரிக்குள் நுழைய முயன்றுள்ளார். அங்கே ஹங்கேரி எல்லைக் காவலர்களிடம் அந்த பெண் பணத்துடன் பிடிபட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அதன்படி அவரை குடியேற்ற அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர். அவருடைய சூட்கேஸ்களை பரிசோதனை செய்தபோது, அதில் கத்தை கத்தையாக யூரோக்கள் இருந்தன.

இவ்வளவு பணத்தை எடுத்துக் கொண்டு போர்ப் பகுதியை அவர் கடந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, இதனிடையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோட்விட்ஸ்கி ஊழல் புகாரில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது.

இந்த அளவுக்கு பணத்தை வைத்து ஒருவேளை அந்த முன்னாள் எம்.பி.யின் மனைவி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்த உக்ரேனியர்களுக்கு உதவுவாரா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ukraine