பழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் பழம்பெறும் நடிகர் திலீப் குமார் உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையிலேயே இருந்தார்.

அவர் நலம்பெற்று வாழ வேண்டும் என பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் வேண்டி வந்தனர். அண்மையில் கூட உடல்நிலை குறைவு ஏற்பட்டு மும்பையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின் அவர் நலம் பெற்று வீடு திரும்ப, ரசிகர்கள் அவர் நன்றாக இருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வந்தனர்.

இந்த நிலையில் 98 வயதான நடிகர் திலீப் குமார் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது மரண செய்தி கேட்டு அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.