வலிமை பர்ஸ்ட் லுக் தேதி இது தான் !! போனி கபூர் போடும் மாஸ்டர் ப்ளான் மிரளும் திரையுலகம்

வலிமை தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வருகிற ஜுலை 15 ரிலிஸாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் செய்திகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நா இந்ட்களாகவே விரைவில் தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் ஒரு நேரடி ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார் என்னும் தகவல் இணையதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த தகவல் வெளியான பின்னணியை விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் போதே தல அஜித்திடம் மேலும் இரண்டு படங்களை தயாரிக்கும் வாய்ப்பை கேட்டுள்ளார். அதற்கு தல அஜித்தும் சம்மதித்துள்ளார். அப்படிதான் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை போனி கபூர் தயாரித்தது. இதற்கிடையே நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போதே போனி கபூர், தல அஜித்தை வைத்து தான் ஒரு பாலிவுட் படத்தை எடுக்க விரும்புவதாகவும், அதற்கு அஜித் ஓகே சொன்னால் கண்டிப்பாக தான் தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தன்னுடைய ட்விட்டர் வலை தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டார்.

அப்போது அந்த தகவல் வைரலாக பரவியது. ஆனால் தல அஜித் தரப்பிலிருந்து எந்த பதிலும் போனி கபூருக்கு அப்போது கொடுக்கவில்லையாம். இந்த நிலையில்தான் மீண்டும் இந்த தகவல் இணையதளங்களில் பரவ துவங்கி உள்ளது. வலிமை படத்தை தொடர்ந்து தல 61 படத்தை ஆரம்பத்தில் கோகுலம் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் வலிமை படத்தின் காலதாமதம் காரணமாக போனி கபூருக்கு எந்த வித இழப்பும் ஏற்பட்டு விட கூடாது என தல 61 படத்தை தயாரிக்கும் பொறுப்பையும் போனி கபூருக்கே கொடுத்துள்ளார் தல அஜித். எனவே அவருக்கு கொடுத்த மூன்று படங்களுக்கான வாக்குறுதியை அஜித் இதன் மூலமாக நிறைவேற்றி உள்ளார். நேரடி ஹிந்தி படத்தில் நடிக்க அஜித் போனி கபூர் இடையை பேச்சுவார்த்தை நடைபெற்றது உண்மையே. ஆனால் அதில் தல அஜித் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதே நமக்கு கிடைத்த தகவலாக உள்ளது. எனவே இப்போதைக்கு நேரடி ஹிந்தி படம் என்பது இல்லை.