இந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம்! ஏன்? நடந்தது இது தான் !!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சோம் சேகர். இவர்
மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் குத்துச் சண்டை வீரர் ஆவார். மேலும் சோம் விளம்பரங்கள், ஆல்பம் பாடல்கள் மற்றும் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் அவர் தனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருப்பதாகவும், அதற்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை எனவும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அடிக்கடி தெரிவித்திருந்தார். மேலும் தற்போது சோம் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக இணைந்து போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இவர் தனது வேலைகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வபோது பிக்பாஸ் சீசன் 4 மூலம் கிடைத்த நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அந்தவகையில் சோம் சமீபத்தில் ரியோவின் வீட்டிற்கு சென்று அவருடன் நேரத்தை கழித்துள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து ஜாலியாக வீடியோ கேம் விளையாடியுள்ளனர். அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ரியோவின் மனைவி ஸ்ருதி கிண்டலாக, சோம் எனது தொலைக்காட்சி நேரத்தை கடத்தி விட்டார். (Hijacking my TV time) என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு சோம் விளையாட்டாக “ஹாஹா மன்னிக்கவும்” என்று பதில் அளித்துள்ளார்.