பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியதற்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணமா? வெளியான அதிர்ச்சி உண்மை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய ஹிட் கொடுத்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த ஆண்டு பிக்பாஸ் 5 சீசன் ஆரம்பிக்க போகும் நிலையில் பிக்பாஸ் பிரபலங்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.

நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிகர் நகுல் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் தன்னை அசிங்கப்படுத்தியும் தரம் தாழ்த்தி பேசி வருகிறார்கள் என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

அதற்கான அறிக்கையை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததை அடுத்து மூத்த நட்சத்திரம் தான் வனிதா வெளியேறியதற்கு காரணம் என்றும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார். தற்போது அவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் செயல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வனிதா கலந்து கொண்ட கடைசி எபிசோட்டின் போது நடிகை ரம்யா கிருஷ்ணன் 10ற்கு 1 மதிப்பெண் கொடுத்ததால் தான் இதற்கு காரணம் என்று வெளியானது.

இதற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன், பிக்பாஸ் ஜோடிகலின் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்று நீங்கள் வனிதாவிடம் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு பிரச்சனையில்லை.இதுபற்றி கருத்து தெரிவிக்கவிருப்பமில்லை என்று கூறியுள்ளார்.