ஜஸ்ட் இன்னும் இரண்டே நாட்கள் ? வலிமை குறித்து வெளியான முக்கிய அப்டேட் என்ன தெரியுமா

இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் `நேர்கொண்டப் பார்வை` படத்தைத் தொடர்ந்து இரண்டாவது திரைப்படமாக உருவாகிவருகிறது `வலிமை. 600 நாட்களுக்கு மேலாகியும் படத்தின் பெயரைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை.

வலிமை படத்தில் நடிக்கும் நடிகர்களில் தொடங்கி தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவரிடமும் சோசியல் மீடியாவில் அப்டேட் கேட்டுவருகிறார்கள் தல ரசிகர்கள்.

சமீபத்தில் யுவன் ஷங்கர்ராஜா சோசியல் மீடியாவில் பேசும்போது, தாய்மையை மையமாகக் கொண்டு ஒரு பாட்டு படத்தில் இருக்கிறது என்றார். இப்படி, யுவன் மற்றும் கதாநாயகி ஹீமா குரேஷியிடம் இருந்து மட்டுமே சின்ன சின்ன அப்டேட்டுகள் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது.

இந்த மாதத்தில் வலிமை பர்ஸ்ட் லுக் உறுதியாக வெளியாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கோவிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராக உள்ளனர்.