கொரோனாவால் வெப் சீரிஸில் களமிறங்கும் நடிகர் சரத்குமார் !!! படத்தின் தலைப்பு என்ன தெரியுமா ?? செம்ம மாஸ்

வெப் சீரிஸ்கள் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் சீரிஸ் ஆர்வத்துடன் நடிக்க துவங்கியுள்ளனர்.

ஏற்கனவே சமந்தா, காஜல் அகர்வால், ரம்யாகிருஷ்ணன், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சரத்குமாரும் வெப் சீரிஸில் நடிக்கிறார். இதனை நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார்.

சரத்குமார் அறிமுகமாகும் வெப் சீரிஸ் ‘இரை’ birds of prey என பெயரிடப்பட்டு உள்ளது. தூங்காவனம், கடாரம் கொண்டான் படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, இந்த வெப் சீரிஸை இயக்க உள்ளார்.

இந்த வெப் சீரிஸை நடிகை ராதிகா சரத்குமார், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.