இந்த ஒரு படத்தால் நடு தெருவுக்கு வந்த நாசர் !!பிரபல நடிகர் நடிகைகளை நம்பி மோசம் போனது தான் மிச்சம் !! இவருக்கா இந்த நிலை

வயதானாலும் கூட தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் கலக்கிய வருபவர்தான் நடிகர் நாசர். இவர் தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல வருடங்களாக நடித்து சினிமாவில் ஒரு அங்கமாக திகழ்கிறார்.இவர் ஒரு திரைப்படத்தில் நடித்தார் என்றால் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பதால் இவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் சினிமாவிற்கு குணச்சித்திர நடிகராக தான் முதலில் அறிமுகமானார்.இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து வில்லன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது முரட்டு வில்லனாக வலம் வந்து கொண்ட இவர் குறிப்பிட்ட காலத்தில் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருக்கு வயதான காரணத்தினால் முன்னணி நடிகர்களுக்கு அப்பாவாகவும், தாத்தா போன்ற கேரக்டர்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவ்வாறு ஒரு சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சினிமாவில் சில தவறுகளையும் செய்து படாதபாடு பட்டுள்ளார்.

அதாவது இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்ததார்.இப்படிப்பட்ட நிலையில் திரைப்படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்த அரபித்தார்.அந்தவகையில் ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி அது மொத்தமாக தோல்வியடைந்ததால் தனது துணிமணிகளை விற்று அதன்மூலம் வாழ்ந்து வந்த கதை தெரியுமா.

நாசர் இயக்கிய அந்த திரைப்படம் பாப்கார்ன். இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் ரொமான்ஸ் போன்ற காட்சிகள் நிறைந்து இருக்கும் இத்திரைபடத்தில் ஹீரோவாக மோகன்லால் மற்றும் இவருக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஊர்வசி என ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தார்கள்.

சொல்லப்போனால் தமிழ் சினிமாவிலேயே படுமோசமான தோல்வியடைந்த திரைப்படம் என்றால் அது இந்த திரைப்படம் தான். இதற்கு முன்பு இப்படி ஒரு திரைப்படம் அமைந்தது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தினை இயக்குவதற்காக நாசர் அதிகமாக கடன் வாங்கியுள்ளார் எனவே கடன் தொல்லை தாங்க முடியாமல் போய்வுள்ளது அதோடு நடிகர் நாசருக்கு சங்கத்தில் ரெக்கார்டும் போட்டு விட்டார்களாம்.

இப்படிப்பட்ட நிலையில் நாசரால் கடனை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தினால் இவரின் மனைவி கமீலா நாசர் நீங்கள் கடனை அடைக்க வேண்டும் என்றால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தான் ஆக வேண்டும் வேறு வழி இல்லை என்று கூற அதன் பிறகு நாசரும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதன் மூலம்தான் அனைத்து கடன்களையும் அடித்தாராம்.