திருமணமான நடிகை மீனாவை மறு திருமணம் செய்ய விரும்பும் நபர் யார் தெரியுமா ? மீனா கூறிய அதிர்ச்சி உண்மை

தமிழ் சினிமா மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த மீனா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருப்பவர் அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித் உள்ளிட்ட சிலர் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்த மீனா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருப்பவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருவதால் மீண்டும் பிஸியாகியிருக்கிறார். ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் மீனா வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும், பாசிட்டிவான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற தனது கொள்கையை மாற்றிக்கொண்ட மீனா, நெகட்டிவான கதாப்பாத்திரங்களில் நடிக்கவும் தான் ரெடி, என்று சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்க தொடங்கியிருக்கும் மீனா, சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள், என்று அவர் அறிவிக்க, ஒரு ரசிகர், “உங்களை நான் திருமணம் செய்ய விரும்புகிறேன், நடக்குமா? என்று கேட்டார்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த மீனா, தனது திருமண புகைப்படத்தை பதிவிட்டு, “லேட்” என்று பதில் அளித்துள்ளார்.