பிக்பாஸ் சீசன் 5 எப்போது? போட்டியாளர்கள் யார்? .. கசிந்த உண்மை இதோ

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசனுக்கு பெரிய பிரச்சனை எல்லாம் இருந்தது.

ஆனால் அடுத்தடுத்து 2,3,4 சீசன்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடந்தது. 5வது சீசன் வழக்கமான நேரம் என்றால் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக இன்னும் 5வது சீசன் தொடங்கப்படவில்லை.

அக்டோபர் மாதம் 4வது சீசன் எப்படி கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்ததோ அதேபோல் 5வது சீசன் நடக்கும் என்கின்றனர்.

தற்போது இந்த 5வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என ஒரு லிஸ்ட் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது, ஆனால் அந்த லிஸ்ட் பார்க்கும் போது உண்மை என்பது போல் தெரியவில்லை.

அப்படி யார் யார் பெயர்கள் வருகின்றன என்ற விவரம் இதோ ஷிவாங்கி, அசிம், தர்ஷா, கனி, சுனிதா, பூனம் பாஜ்வா, நகுல்.