உங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி!!! எப்படினு தெரியுமா?

பழைய அரிய வகை 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.1 லட்சம் வரையில் நீங்கள் சம்பாதிக்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

பழைய பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதுவும் பழைய நாணயங்களுக்கு பல்வேறு வலைதளங்களில் தேவை அதிகமாக இருக்கிறது. அந்த நாணயத்தின் அசல் மதிப்பு மிக மிகக் குறைவு என்றாலும் அதற்குக் கிடைப்பதோ பெரிய தொகை.

ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும். பல்வேறு வலைத்தளங்களில் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது.

OLX தளத்தில் பழைய 50 பைசா நாணயத்தைக் கொடுத்து லட்சக் கணக்கில் பணம் பெறும் வாய்ப்பு இப்போது வந்துள்ளது. 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 50 பைசா நாணயத்தை இந்த வெப்சைட்டில் நீங்கள் விற்பனை செய்யலாம்.

OLX போல coinbazzar உள்ளிட்ட வேறு சில வெப்சைட்களிலும் நீங்கள் இதை விற்பனை செய்ய முடியும். வெப்சைட்டிலும் இந்த நாணயத்தை விற்பனை செய்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

இந்த நாணயத்தைக் கொடுத்தால் உங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் பணம் கிடைக்கும். இது ஸ்டீல் காயினாக இருக்க வேண்டும்.

மாதா வைஷ்ணோ தேவி புகைப்படம் பொறிக்கப்பட்ட ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை விற்பனை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

அதேபோல, 786 சீரீஸ் நாணயங்களும் நோட்டுகளும் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. டிராக்டர் படம் அச்சிடப்பட்ட பழைய 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அதை கொடுத்து ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.

பழைய 1 ரூபாய், 2 ரூபாய், 25 பைசா நாணயங்களுக்கும் இதுபோல லட்சக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் விலை கிடைக்கிறது. நீங்கள் பழைய நாணயங்களை சேகரித்து வைப்பவராக இருந்தால் அதை வைத்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம்.