தல அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வலிமை படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு பிறகு எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வலிமை படத்தில் ஒரு திருவாழா பாடல் இருப்பதாகவும், அது ஒரு தரமான குத்து பாடல் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் first look போஸ்டர் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது என வலிமை படத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் வெளியிட்ட தகவல் இன்று வைரலாக பரவி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.