20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்! செம ஹேப்பியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூர்யா இறுதியாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கொரோனோவால் தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் நடிக்கிறார். பின்னர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 எனும் படத்தில் நடிக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா 40 படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா மற்றும் ராஜ்கிரண் இருவரும் ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.