நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான KGF திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் அதிக வசூல் கொடுத்து சாதனை படைத்தது.

இதையடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாவது பார்டான KGF 2 உருவாகி உள்ளது. இதில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் வருகிற 8ம் தேதி வெளியாக உள்ளது என்னும் அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த மெகா மாஸ் அப்டேட் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.