தல அஜித் தற்போது நடித்து வரும் வலிமை படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு இன்றோடு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முடிவடைகிறது. கடைசியாக தல அஜித்தின் இன்ட்ரோ பாடலாக ஒரு குத்து பாடலை படமாக்கி முடித்துள்ளனர்.

இதையடுத்து இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மற்றும் இன்னும் சில காட்சிகளும் மீதம் உள்ளதாம். இவற்றை எடுக்க குஜராத் அல்லது ராஜஸ்தானுக்கு படக்குழுவினர் செல்ல இருக்கின்றனர்.

ஆனாலும் ராஜஸ்தானில்தான் இந்த க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாம். ஏற்கனவே தீரன் படத்தில் சில காட்சிகளை ராஜஸ்தானில் எடுத்திருந்தார் வினோத் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஜனவரி இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையுமாம்