ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது மிக வேகமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது, மேலும் இந்த சீசனில் யார் வெற்றி பெற போகிறார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் சாண்டி, இவர் அந்த சீசனில் மக்களின் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்.

மேலும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள சாண்டி, தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

ஆம் 3.33 என்ற படத்தில் தான் சாண்டி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார், அப்படத்தின் போஸ்ட்டரை மாஸ்டர் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த போஸ்டர்..