மு.க.ஸ்டாலின் அதையெல்லாம் சொல்லுவார்.! ஏமாந்துவிடாதீர்கள் மக்களே உஷார்.! எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இன்றைக்கு தமிழகத்திலே 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே இயக்கம்அ.தி.மு.க.தான் என தெரிவித்தார்.

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற அரசு அ.தி.மு.க. அரசு. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 10 நாட்கள் இருப்பாரா, ஒரு மாதம் இருப்பாரா, 6 மாதம் இருப்பாரா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய தினம் 3 ஆண்டுகள் 10 மாத காலம் வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகின்றேன்.

தி.மு.க. ஆட்சியில் நில அபகரிப்பு, ரவுடித்தனம்தான் அதிகம் இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் இவை அனைத்தும் ஒடுக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லுவார், ஏமாந்து விடாதீர்கள். தேர்தல் அறிக்கையிலே நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார், கொடுத்தாரா? அனைத்தும் பொய் அறிக்கை, மக்களை ஏமாற்றுகின்ற அறிக்கை, மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.