சற்றுமுன் வெளியான வலிமை திரைப்படத்தின் மாஸ் அப்டேட் இதோ ! ரசிகர்கள் கொண்டாட்டம் !

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் ஒரு தரமான அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு பிறகு ஒரு வருடம் தாண்டியும், இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் வருகிற புத்தாண்டை முன்னிட்டு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருக்கிறது என நேஷ்னல் மீடியாவான டைம்ஸ் ஆஃப் இந்தியா நேற்று தகவலை வெளியிட்டனர்.

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் புத்தாண்டு அன்று இந்த மோஷன் போஸ்டர் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது கோலிவுட் வட்டாரத்திலும் தகவல்கள் பரவி வருகிறதாம். எனவே புத்தாண்டை முன்னிட்டு தல ரசிகர்களுக்கு மாஸான ட்ரீட் இருப்பது தற்போது ஏறக்குறைய உறுதி ஆகி உள்ளது.