பிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா ?

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2021-ம் ஆண்டு எப்படி இருக்கபோகிறது என்றால், 9 நட்சத்திரங்களை கொண்ட ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டில் சிறப்பாக இருக்கபோகிறது.

தத்ரூபமான சிந்தனைகளும், அதிகமான இரக்க குணங்களும், தாய்மை உணர்வுகளும் கொண்டவர்களே இந்த ஆண்டு ஒரு மாற்றம் ஏற்படபோகிறது.

ராகு, கேது, குரு, சனி ஆகிய நான்கும் சாதகமான அளவில் இருப்பதால் பெரிய அளவில் மாற்றம் நிகழும்.

உங்கள் ராசியில் அஷ்டம் சனியில் இருந்து இதுவரை பிரச்சினைகளை சந்தித்து வந்த நீங்கள் இனி நெருக்கடியான காலங்களில் இருந்து சகஜமான வாழ்க்கைக்கு வருவீர்கள்.

இந்த ஆண்டில் முழுமையான நன்மைகளை எதிர்பார்க்கலாம். சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும், அதில் இருந்து விடுபட குருபகவான் உதவி செய்வார். சங்கடங்கள் படிப்படியாக குறையும்.

உயர் கல்வி படிப்பவர்கள் அதிர்ஷ்டமான பலன்களை அழிப்பார். உங்கள் ராசிக்கு திருமணமாகத பெண்களுக்கு இந்த ஆண்டில் திருமணமாகும். ஆண்களுக்கு முயற்ச்சி செய்து கொண்டே இருக்க கண்டிப்பாக திருமணம் கை கூடும்.

மாணவர்கள் இந்த ஆண்டில் தேர்ச்சியில் அதிகமான மார்க் எடுப்பார்கள். கவலை இருக்காது. வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும்.

மேலும், தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பசுகளை வளர்க்கும் ரிஷப ராசிக்கு சுபிக்‌ஷம் பெரும். ஆன்மீக சிந்தனைகள் மற்றும் எண்ணங்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள்.

முன்னோர்கள் சொத்து கைகூடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பழைய கடன்கள் வசூலிக்கபடும். மருத்துவ துறையில் இருப்பவர்கள் வருமானம் இரட்டிப்பாக இருக்கும். ஊதிய பதவி உயர்வு அதிகமாக கிடைக்கும்.

எதிரிகள் பலம் குறைந்து போட்டி பொறாமை குறையும், நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. எதிலும் அதிக முதலீட்டை செய்யாதீர்கள்.

பண விஷயத்தில் யாரை நம்பியும் இறங்க வேண்டாம். லாபம் குறையும். தாம்பத்திய விஷயத்தில் ஈடுபாடு குறையும்.

நிலம் வீடு, வாகனம் வாங்க சிறப்பான ஆண்டாகவும் அமையும். கணவரின் சார்ந்த எந்த உதவியிலும் ஈடுபட வேண்டாம். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு அதில் கவனமாக இருக்கவேண்டும்.

மேலும், கோவில்களுக்கு சென்று வாருங்கள். யானைக்கு உணவுகளை வழங்குங்கள். துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவி செய்வதால் சனியின் பார்வை விலகும். காகத்திற்கு உணவு வையுங்கள் நன்மையே நடக்கும்.