லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது என செய்திகள் ஏற்கனவே வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. ஏப்ரல் 14ம் தேதிதான் வெளியாகிறது என்கிற செய்தி சினிமா உலகில் கசிந்து கொண்டிருக்கிறது. அதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு மாஸ்டர் படத்துடன் மோதுவது என ஏற்கனவே சிம்பு நடித்த’ஈஸ்வரன்’ படக்குழு முடிவெடுத்துள்ளது. மாஸ்டர் தள்ளிப்போனால் வசூல் வேட்டை ஈஸ்வரன் படத்திற்குதான் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மாஸ்டர் மீண்டும் தள்ளிப்போகிறது என்கிற செய்தி விஜய் ரசிகர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது