மகன் என்றும் பார்க்காமல் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! ஆடிப்போன திமுகவினர்!!

தேர்தல் பரப்புரைக்காக திமுக சார்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரை தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக் கூட்டத்தில் பேனர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது திராவிட கட்சிகள் முந்தைய தலைவர்களை முன்னிலைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.

அதிமுக – எம்ஜிஆர் என்று ஒரு விவாதமே நடைபெற்று வரும் நிலையில் ஸ்டாலின் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டலங்களில் உதயநிதியின் படமே பெரிய அளவில் இருப்பதும், மற்றவர்களின் புகைப்படங்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த குற்றச்சாட்டையெல்லாம் களையும் நோக்கத்தில் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பேனர் வைக்கும் கலாசாரத்தை விட்டொழிக்க வேண்டும் என ஸ்டாலின் ஏற்கனவே கேட்டுக் கொண்டார்.

ஆனாலும் தொடர்ந்து திமுகவினர் பேனர்கள் வைத்துவருவதால், இனி இதுபோன்று பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.