இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வெளியேறுவது இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது வைரலாகி வரும் தகவல் என்னவென்றால் அர்ச்சனா மற்றும் ஆஜித்திற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கிறதாம்.

அர்ச்சனா டாஸ்க் என்று வந்துவிட்டால் கடுமையான போட்டியாளர் என்பதால் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் இரண்டு பேர் எவிக்ஷன் என்றால், இவர்கள் இருவரும் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம்.

அப்படி ஒரு எவிக்ஷன் என்றால் அர்ச்சனா அல்லது ஆஜீத் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.