குடும்பம் நாசமா போகனுமா? பிக்பாஸ் பாருங்க… முதல்வர் எடப்பாடி சாட்டையடி!!!

தமிழில் முதல் சீசனில் இருந்தே பிக் பாஸிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதனால் வருடத்திற்கு வருடம் இந்த ஷோவிற்கான பிரம்மாண்டமும் கூடிக்கொண்டே போகிறது. மேலும் வாராவாரம் பதிவாகும் வாக்குகளில் பல கோடிகள் என கமல் இதற்கு முன் ஷோவிலேயே கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் ஷோவை கமல்ஹாசன் தான் கடந்த நான்கு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அவர் மாற்றப் படுவதாக அடிக்கடி தகவல்கள் வந்தாலும் அவர் இந்த வருடமும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் போட்டியாளர்களை விமர்சிப்பது போல சில அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக விமர்சித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். ஒரு கருத்தை கூறிவிட்டு, நான் வீட்டுக்குள் இருப்பவர்களை தான் சொல்கிறேன் என சமாளித்துவிடுவார்.

கமல்ஹாசன் பிக் பாஸில் தொடர்ந்து அரசியல் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்ச்சியை தாக்கி பேசி இருக்கிறார். “பிக் பாஸ் நடத்துறவர் அரசியல் செஞ்ச எப்படி இருக்கும். இதை பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. பிக் பாஸ்ல என்னங்க இருக்கு. அதை போய் நடத்திட்டு இருக்காரு.”

“நல்ல இருக்குற குடும்பத்தை கெடுப்பது தான் அவர் வேலை. அந்த தொடரை பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப்போகும், நல்ல இருக்கும் குடும்பமும் கெட்டுப்போய்டும்” என முதலமைச்சர் விமர்சித்து இருக்கிறார்.