சசிகலா விடுதலை எப்போது? சிறை நிர்வாகத்துக்கு உளவுத்துறை கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது
அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சசிகலாவின் விடுதலை குறித்து உளவுத்துறை பெங்களூர் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
அந்த கடிதத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தகவல் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டால், சட்டமன்ற தேர்தலில் அவருடைய பங்கு பெரும்பாலும் இருக்கும் என்று கருதப்படுகிறது தமிழகம் முழுவதும் அவர் அமமுகவுக்காக பிரச்சாரம் செய்வாரா அல்லது அதிமுகவை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்