கட்சி ஆரம்பிப்பதிலேயே MGR-ரின் பிளானை பயன்டுத்திய ரஜினி ?

நடிகர் ரஜினியின் கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும் ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த மக்கள் சேவை கட்சி என்பது ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் ஆரம்பித்த கட்சி என்றும், அந்த கட்சியில் ரஜினி சேர்ந்து தலைவர் ஆகப்போவதாகவும் கூறப்படுகிறது.

இது எம்ஜிஆர் பாணி என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற நிர்வாகி அனகாபுத்தூர் ராமலிங்கம் வைத்திருந்த அதிமுக என்ற அமைப்பில் எம்.ஜி.ஆர் தொண்டராக சேர்ந்து அதன்பின் அக்கட்சியின் தலைவரானார் எம்.ஜி.ஆர்.

அதே ட்ரெண்ட் பயன்படுத்தி தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஸ்டாலின் என்பவர் பதிவு செய்துள்ள மக்கள் சேவை கட்சியில் சேர்ந்து அக்கட்சிக்கு தலைமை ஏற்கப்போகிறாரா ரஜினிகாந்த் ? எம்.ஜி.ஆர் போன்ற ஆட்சியை தருவேன் என சொன்ன ரஜினி, கட்சி தொடங்குவதிலும் எம்.ஜி.ஆர் பாணியையே பின்பற்றுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.