சித்ரா இறந்த நாள் அன்று நடந்தது என்ன? ஹேமந்தின் அப்பா அதிரடி பேட்டி

சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் சின்னத்திரை நடிகையான சித்ரா.

அவர் தற்கொலை செய்து கொள்ளும் பெண்ணே இல்லை, கொலை செய்து விட்டார்கள் என சித்ராவின் தாயும், அவரது ரசிகர்களும், பல்வேறு பிரபலங்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சித்ரா இறந்த அன்று அவருடன் இருந்த கணவர் ஹேம்நாத்திடம் பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் வீடு கட்டுவதற்கும், கார் வாங்குவதற்கும் அதிகம் கடன் வாங்கியதாகவும், அதை அடைப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து சம்பாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு சித்ரா ஆளானதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே ஹேம்நாத்துடன் காதல் வயப்பட்டு, கல்யாணம் வரை வந்துள்ளார், கல்யாணம் முடிந்ததும் சித்ரா நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை ஹேம்நாத் விரும்பவில்லையாம்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதமும் நடந்துள்ளது, இதன் காரணமாக ஏற்கனவே ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாராம் சித்ரா.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதியன்று விடுதி அறையில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஹேம்நாத். இதனால் மனமுடைந்த சித்ரா, நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என பொருள்படும்படி ஆங்கிலத்தில் I’M SO DEPENDENT ON YOU என கூறியுள்ளார்.

அவரது காதலை காதிலேயே வாங்காத ஹேம்நாத், ‘நீ செத்துத் தொலை.’ என வெறுப்பை கக்கி விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.