ஒரு பக்கம் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் இந்த வேலைகளுமா ? அனல் பறக்கும் வலிமை இறுதி கட்ட பணிகள், முழு தகவல் இதோ

தல அஜித்தின் 60வது திரைப்படமாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ரசிகர்களை அதிர வைக்க கூடிய பல ஆக்ஷன் காட்சிகள் இருக்குமாம்.

இந்த படத்தை வருகிற சம்மருக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் படப்பிடிப்பு தற்போது படு வேகமாக நடந்து வருகிறது. குறிப்பாக வருகிற ஜனவரி மாதம் இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் புடிக்க வேண்டுமென்பதுதான் திட்டமாம்.

ஒரு பக்கம் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்க, இன்னொரு பக்கம் இந்த படத்தின் VFX வேலைகளும் தற்போது ஆரம்பித்து, அந்த பணிகளும் நல்ல முறையில் நடை பெற்று வருகிறதாம். சென்னையிலுள்ள ஜெமினி ஸ்டுடியோஸில் இந்த வேலைகள் நடைபெறுகிறதாம். வலிமை வருகிறது வலிமையாக.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் வலிமை படம் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வலிமை படத்தை இசை ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அப்போது கண்டிப்பாக ஒரு மாஸ் தீம் மியூசிக் அல்லது பாடல் இருக்கிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.