விஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த திடுக்கிடும் தகவல்

கொரோனா நேரத்தில் வெள்ளித்திரையை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு அதிகம் நல்ல விஷயங்கள் நடந்தது.

கல்யாணம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு என பிரபலங்களுக்கு நடந்த நல்ல விஷயங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி எல்லோராலும் கொண்டாடப்பட்ட நடிகை சித்ராவிற்கும் ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் நடிகை தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு முன்பும் சித்ரா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தாராம். காரணம் ஹேமந்த் வேலை முடித்துவிட்டு வந்தால் இன்று யாருடன் நடித்தாய், யாருடன் நெருக்கமாக டான்ஸ் ஆடினாய் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்பாராம்.

தற்போது அவரது மரணமும் ஹேமந்தின் சந்தேகத்தாலேயே நடந்தது என்று கூறுகின்றனர்.

ஒரு கட்டத்தில் ஹேம்நாத் சித்ராவை சந்தேக கண்ணோட்டத்துடன் சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால், நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று நடிகை சித்ரா தெரிவித்துள்ளார்.

அவரின் காதலை புரிந்து கொள்ளாத ஹேம்நாத், “நீ செத்து தொலை” என்று நடிகை சித்ராவிடம் தெரிவித்து, அவரின் அறையை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் மனமுடைந்த நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார், அவரை கைது செய்து, பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின், பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.