நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். வரும் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் நிலையில், ரஜினியின் கட்சி பெயர் இன்று காலை கசிந்தது.

நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு, ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி “பாபா முத்திரை” சின்னத்தை ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியது. மேலும், ரஜினிகாந்த் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம், தங்களுக்கு “பாபா முத்திரை” சின்னம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அரசியல் கட்சி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்று, ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் அளித்த்யு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், “கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு ரசிகர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.