பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை ரோலில் நடிக்க போவது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை தான்? தீயாய் பரவும் தகவல்

பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா மரணமடைந்த செய்தியை ரசிகர்களை இன்று வரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்து யார் முல்லையாக  நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதே நிலையில் செம்பருத்தி சீரியலில் இருந்து திடீரென நீக்கப்பட்ட நடிகை ஜனனி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற செய்தி வைரலானது.

இதுபற்றி அவர் கூறும்போது “சித்ரா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என்னாலும் முடியாது. சித்ரா முல்லையாக வாழ்ந்திருக்கிறார். எனக்கு தெரிந்து நான் அதற்கு தகுதி இல்லை” என்பது போல அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் வைரலாகும் தகவல் என்னவென்றால் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு தங்கையாக நடிக்கும் காவ்யா அடுத்து முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது தெரிய வில்லை பெருத்திருந்து பார்க்கலாம்.