குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி இந்த பிக்பாஸ் பிரபலத்தின் அக்காவா? பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஓடும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

மற்ற நிகழ்ச்சிகளை தாண்டி இது பெரிய அளவில் ரீச் பெற்றுள்ளது. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் பயங்கரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டிருப்பவர் கனி. இவர் யார் தெரியுமா, இவர் நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளருமான விஜயலட்சுமியின் அக்கா.

இவர் பிரபல இயக்குனரான அகத்தியனின் மகள் ஆவார், கனியின் உண்மையான பெயர் கார்த்திகா என்பது குறிப்பிடத்தக்கது.