பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் அவரது சுற்றுப்பயணத்தின்போது, அவருக்கு குண்டு துளைக்காத கார் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது சுற்றுப்பயணத்தின்போது, ஆயுதம் தாங்கிய 7 கமாண்டோக்கள் உடன் செல்வார்கள். 2 பாதுகாப்பு வாகனங்களும் செல்லும். கைலாஷ் விஜயவர்கியா வீட்டில் எந்நேரமும் 2 முதல் 8 தொழிலக பாதுகாப்பு படையினர் காவலுக்கு இருப்பார்கள். அவருடன் 2 தனி பாதுகாப்பு அதிகாரிகள் எப்போதும் இருப்பார்கள். மொத்தம் அவருக்கென 22 பாதுகாப்பு படையினர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.