மாமனார் ரஜினியால் மதிப்பை இழந்த தனுஷ் ! பேச்சு வார்த்தை கூட இல்லாமல் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி !

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து, மிகவும் நெருக்கமான உறவு உடையவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரின் மருமகன் நடிகர் தனுஷ்.

தனுஷ் கலந்துகொண்ட குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில், பல முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி புகழ்ந்து பேசாமல் இருந்ததே இல்லை. ஆனால், தற்போது ரஜினிக்கும், தனுஷுக்கும் பெரிதும் பேச்சு வார்த்தையே இல்லையாம்.

அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, ரஜினியை வைத்து சில வருடங்களுக்கு முன் நடிகர் தனுஷ் தனது Wunderbar Films மூலம் பா.ரஞ்ஜீத் இயக்கத்தில் ‘காலா’ எனும் திரைப்படத்தை தயாரித்தார்.

மக்கள் மத்தியில் படம் வரவேற்பை பெற்றாலும், நடிகர் தனுஷின் Wunderbar Films தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘காலா’ படத்தினால் சுமார் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஆகிவிட்டதாம்.

ஆனால் அப்போது கூட, தனது மருமகன் நஷ்டம் அடைந்துவிட்டார் என்று நினைக்காமல், நடிகர் ரஜினி ஒரு பைசா மீதி விடாமல் தனது சம்பளத்தை வசூல் செய்து வாங்கிவிட்டாராம்.

இதனால் ரஜினிக்கும், தனுஷுக்கும் அப்போது இருந்தே பேச்சு வார்த்தை பெரிதும் இல்லாமல் இருக்கிறதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய ரூ. 30 கோடி நஷ்டத்தை, மற்ற திரையுலக தயாரிப்பாளர்களிடம் இருந்து கடன் வாங்கி அடைத்தாராம் நடிகர் தனுஷ்

அந்த கடனை அடைக்க தடுமாறிய தனுஷ், அதுக்கு பதிலாக தனது காஷீட்டை ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் தந்துவிட்டாராம்.