இறப்பதற்கு முன் கடைசியாக சித்ரா என்னிடம் சொன்னது இது தான்! விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் வேதனையுடன் சொன்ன தாய்

பிரபல நடிகையான சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கடைசியாக என்ன பேசினார் என்பதை அவருடைய தாய் வேதனையுடன் கூறியுள்ளார்.

சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில், பிரபல சீரியல் நடிகையான சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

ஆனால், அவர் தற்கொலை மர்மமாகவே உள்ளது. ஏனெனில் அவர் தற்கொலை செய்து கொண்ட போது, அதே ஹோட்டலில் அவர் பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேமந்த் வந்து சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, சித்ராவின் தாயார் கொடுத்த மன அழுத்தமும், ஹேமநாத் கொடுத்த மன அழுத்தமும் தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுவதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேமந்த் தான் காரணம் என்று சித்ராவின் அம்மா விஜயா கூறியுள்ளார்.

நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு அவரது குடும்பத்தினர் ஆஜராகிய நிலையில், அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த்திடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடந்து வந்தது. அப்போது ஹேமந்த் முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொல்லி வருவதாகவும், ஆனால் அவர் சொன்ன அனைத்து வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை இன்று தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது.

முதல் விசாரணையே சித்ராவின் பெற்றோர்தான் விசாரிக்கப்பட்டனர். சித்ராவின் அப்பா காமராஜ், அம்மா விஜயா, சகோதரி சரஸ்வதி ஆகியோரிடம் விசாரணை தனித்தனியாக நடத்தப்பட்டது.

தன் மகள் மரணத்துக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து தர வேண்டும் என்று சித்ராவின் அப்பா ஏற்கனவே பொலிசில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை இதில் நடந்துள்ளதா என்று ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படியே இன்று ஆர்டிஓ விசாரணை நடந்தது. திருமணத்திற்கு சித்ராவுக்கு 50 சவரன் நகையும், ஹேமந்த்துக்கு 20 சவரன் நகையும் தர போவதாக ஏற்கனவே சித்ராவின் பெற்றோர் சொல்லி இருந்ததாகவும், அது சம்பந்தமாக சித்ராவின் அப்பாவும் தன் புகாரில் கூறியிருந்ததால், இன்று அது குறித்தும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும், சித்ரா – ஹேமந்த் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதால், அதற்கான திருமணம் சான்றிதழும் கோரப்பட்டிருந்தது.

அத்துடன் நிச்சயதார்த்த புகைப்படங்களும் விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்பு சித்ரா பேசியது என்ன? வாக்குவாதம் நடந்தது உண்மைதானா போன்ற கேள்விகள் சித்ராவின் அம்மா விஜயாவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு வெளியே வந்த சித்ராவின் பெற்றோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

விசாரணை முடிந்த பின்பு முழு தகவலை அளிக்கிறோம், ஊடகங்கள் தவறான தகவலை சொல்கிறார்கள்.

எந்தவொரு தாயால் மகளுக்கு மனஉளைச்சல் வருமா? எந்த தாயுமே மகளின் தற்கொலைக்கு காரணமாக இருக்க மாட்டார்.

சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேமந்த் தான் காரணம். அதுக்கான விவரங்களை ஆர்டிஓ விசாரணையில் சொல்லி உள்ளோம். விசாரணைக்கு கூப்பிடும்போது மறுபடியும் ஆஜராவோம்.

சித்ரா தற்கொலைக்கு முன் என்கிட்ட போனில் பேசினாள். ஆனா எதுவும் சொல்லவில்லை, நல்ல நிலையில் தான் பேசினாள்.

ஸ்டார்ட் மியூஸிக்கில் இருக்கேன் என்றால், நான் எப்போ ஷூட்டிங் முடியும் என்று கேட்டேன்.. லேட் ஆகும் என்று சொன்னாள். அவ்வளவுதான். எங்கள் இருவருக்கும் சண்டையே இல்லை என்று கூறியுள்ளார்.