பேசாம நீ செத்து போடி ! சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத்! அதிர்ச்சி தகவல் இதோ !

நடிகை சித்ராவுடன் அவரது கணவர் ஹேம்நாத் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்க தகவல்கள் வெளிவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதில், சித்ரா நாடகங்களில் ஆண்களுன் நெருக்கமாக நடிக்கிறார், நடனமாடுகிறார் என்று ஹேம்நாத் திருமணமானது முதல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரியவந்துள்ளன.

கடந்த 9ம் தேதி சித்ரா படப்பிடிப்பு முடிந்து வந்ததும், யாருடன் நடனமாடினாய் என்று ஹேம்நாத் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது ஹேம்நாத் சித்ராவிடம் நீ செத்து போ என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டார் என்றும் அதனால் மன உளைச்சல் அடைந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.