சித்ரா தற்கொலை செய்து கொண்ட அதே நாள் இரவில் அவர் மாமனார், மாமியார் எடுத்த அதிரடி முடிவு…விசாரணையில் தெரியவந்த உண்மை

சித்ரா தற்கொலை செய்து கொண்ட அதே நாள் இரவு அவரின் மாமனார், மாமியார் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாத இடத்தில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி அதிகாலையில் ஹொட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேமந்திடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவும், ஹேமந்தும் கடந்த அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். ஆனாலும் அடுத்தாண்டு ஊரறிய திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையிலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதனிடையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட அதே நாளில் இரவு அவரின் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.

தனியார் செய்தி நிறுவனம் அவர்களிடம் பேட்டி எடுக்க அவர்கள் வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது.

இது குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் கூறுகையில், கடந்த 7ஆம் திகதி கூட இங்கு சித்ராவின் குடும்பத்தார் வந்திருந்தனர்.

அவர்கள் ஹேமந்தின் பெற்றோர்களிடம் திருமண மண்டபத்தை முன் பதிவு செய்வது குறித்து பேசினர்.

இந்த சூழலில் தான் 9ஆம் திகதி புதன்கிழமை சித்ரா அதிகாலையில் இறந்துவிட்டார்.

அன்றைய தினம் இரவே ஹேமந்தின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டனர் என கூறியுள்ளனர்.

ஹேமந்தும் அவரது பெற்றோரும் யாருக்கும் தெரியாத இடத்திற்குச் சென்றது போல் தெரிகிறது, நிலைமை இயல்பு நிலைக்கு வரும்போது தான் அவர்கள் திரும்பி வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.