தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். அஜித்தை போல் தமிழ் சினிமாவில் வேறு யாருமே இவ்வளவு தோல்வி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்து இருக்க முடியாது.

அப்படி ஒரு உண்மையான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் தல அஜித். எந்த சூழ்நிலையிலும் அஜீத்தை விட்டுக் கொடுக்காத அந்த ரசிகர்களுக்காக அஜித் என்ன வேண்டுமானாலும் செய்வார் என பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

தல அஜித்துக்கு சினிமாவில் நெருக்கமான நண்பர்கள் பலர் கிடையாது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் மிர்ச்சி சிவா மற்றும் அஜித் இடையில் எப்படி இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டது என அனைவருக்குமே சந்தேகம் இருக்கும்.

மிர்ச்சி சிவாவின் மனைவி பேட்மிட்டன் வீராங்கனை ப்ரியாவும் தல அஜித்தின் மனைவி ஷாலினியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாம். பேட்மிட்டன் பயிற்சிக்கு சென்ற போது நட்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு தல அஜித் மற்றும் சிவா ஆகிய இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வார்களாம்.

அந்த நட்பின் காரணமாக தான் மிர்ச்சி சிவாவின் திருமணத்திற்கு தல அஜித் சுமார் 50 லட்சம் மொய் வைத்துள்ளாராம். பிரியாவை தனது குடும்பத்தில் ஒருவராக அஜித் நினைத்ததால் தான் அஜித் அந்த திருமணத்தில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கூடவே இருந்து சிறப்பாக செய்து கொடுத்தாராம்.


இந்த தகவலை சமீபத்தில் பத்திரிகையாளரான அனந்தன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.