சசிகலா ரீலீஸ் எதிரொலி ! கட்சியினருக்கு டிடிவி தினகரன் போட்ட திடீர் உத்தரவு !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை சிறிது காலம் அரசியல் ரீதியாக யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் என அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. பின்னர், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறை சென்றார்.

இதனால், டிடிவி தினகரனை ஒதுக்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை டிடிவி தினகரன் தரப்பு கடுமையாக விமர்ச்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கர்நாடாகாவில் சிறை தண்டனைக் காலம் முடிந்து வரும் ஜனவரி மாதம் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக உள்ளார். இந்நிலையில் அதிமுக – அமமுகவினர் இடையே அமைதி நிலவி வருகிறது.

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட யாரையும் தற்போது விமர்சிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக திமுக மட்டும் தாக்கவேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அதிமுக- அமமுக இணைகிறதா அல்லது தேர்தல் கூட்டணி அமைகிறதா அல்லது என்ன காரணம் என தெரியாமல் அவது கட்சி நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்