பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.

எனினும் இவரை கொலை செய்துள்ளார்கள் என்றே சித்ராவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட அன்று அவரது கணவரான ஹேம்நாத்துடன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்துக்கு பின்னரே தற்கொலை முடிவை சித்ரா எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், ஹேம்நாத், சித்ராவின் தாயார் உட்பட அவருடன் நடித்த நடிகர்களுடனும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகள், அருகில் இருக்கும் பிக்பாஸ் வீட்டின் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணையை தெடார்ந்துள்ளனர்.

இதில் சித்ரா மரணமடைந்த அன்று, ஆம்புலன்ஸ் ஒன்று வந்து சென்றது தெரியவந்துள்ளது, இதனால் சித்ரா வேறு எங்கேனும் மரணமடைந்தாரா இல்லை, அவர் இறந்ததற்கு பிறகு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அறைக்கு அழைத்து வரப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிக்பாஸ் கேமராக்களை விடிய விடிய ஆய்வு செய்த போது பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.