சினிமாவில் வாரிசுகள் களமிறங்குவது வழக்கமான விஷயம் தான். இதற்காக பாலிவுட்டில் பெரிய சண்டையே நடந்து வருகிறது, தமிழ் சினிமாவில் அப்படி ஒரு பிரச்சனை இல்லை.

விஜயகுமார் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக நடித்து வந்தவர் அருண் விஜய், இவர் பல தடைகளை தாண்டி இப்போது ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது அருண் விஜய்யின் மகன் சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாம். அடுத்தடுத்த தலைமுறை சினிமாவில் நுழைவது சந்தோஷமாக இருப்பதாக அருண்விஜய் டுவிட் செய்துள்ளார்.

இதோ தனது மகனுடன் அவரே போட்ட டுவிட்,