சனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

சனி பெயர்ச்சி 2020 படி இதுவரை ரிஷப ராசிக்கு 8ம் இடமான அஷ்டம சனியாக முடியாத துன்பங்களை கொடுத்து வந்தார்.

ஆனால், தற்போது நடக்க உள்ள பெயர்ச்சி நிகழ்வில் ரிஷப ராசிக்கு 9ம் இடமான பாக்கிய சனியாக அமர்ந்து யோக பலன்களை அள்ளி கொடுக்கப்போகிறார்.

சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 ஆண்டுகள் வீதம் ஒரு சுற்றை முடிக்க 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

இதில் ஏழரை சனி நடக்கும் 7 1/2 ஆண்டுகளும், அஷ்டம சனி நடக்கும் 2 1/2 ஆண்டு காலத்தில் மிகவும் அதிக சங்கடங்கள், கஷ்டங்களையும், அர்த்தாஷ்டம் சனி காலத்தில் குறைந்த கஷ்டங்களை கொடுத்து சோதிப்பார்.

மேலும், சனி பகவான் 3, 6,11 இடங்களில் அமரும் ஏழரை ஆண்டு காலங்களில் மட்டும் தான் உச்சபட்ச நற்பலன்களை வாரி வழங்குவார். ராசிக்கு மற்ற நிலைகளில் இருக்கும் போது சுமாரான பலன்களைத் தான் வழங்குவார்.

அந்த வகையில் ரிஷப ராசிக்கு அஷ்டம சனி விலகுவதால் பெரிய கஷ்டங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

கடந்த குரு பெயர்ச்சியின் போது குரு மகர ராசிக்கு சென்றார். தற்போது அதே இடத்தில் சனி பகவானும் வந்து அவரின் சொந்த வீட்டில் சஞ்சரிக்க உள்ளார்.

சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் நிலையில், குரு மகரத்தில் நீச்சம் பெற்றாலும், நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படும்.

குரு பகவானும் பாக்கிய குருவாக ரிஷப ராசிக்கு அமர்ந்து தனது 5ம் பார்வையால் மிக சிறப்பான யோக பலன்களை அளித்து வருகின்றார்.

வசதி வாய்ப்புகள் வந்து சேரும். தான தர்மங்கள் செய்வதற்கான வாய்ப்புகளும் அதற்கான வசதிகளும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வந்து சேரும்.

உயர் அதிகாரிகள் அன்பும், ஆதரவையும் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கும். இழந்த வேலை கிடைக்கவும் அமோகமான காலமாகும்.

உங்களுக்கு பரிசு, பாராட்டு, விருதுகள் பெறுவதற்கான சிறப்பான காலமாக இருக்கும்.

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மிக சிறந்த காலமாக இருக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் அவர்களின் ஜனன கால ஜாதக தசா புத்தி மற்றும் அதில் உள்ள குரு சனி இடங்களை ஆராய்ந்தும், ஜோதிட ஆலோசனை, சந்தை நிலவரத்தை ஆராய்ந்து தொடங்க வெற்றி பெறும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த கடன் பிரச்னைகள் தீர்வதோடு, புதிய நுகர்வோர்களைப் பெறுவீர்கள். நல்ல அனுபவ வேலையாட்களைப் பெறுதல், நம்பிக்கையான வியாபாரம் நடத்தல் போன்ற எல்லா விஷயங்களும் சிறப்பாக நடக்கும்.

9ம் இடத்தில் சனி அமர்வதால் உங்கள் ராசிக்கு சுற்றுலா, ஆன்மிக பயணங்கள் போன்ற பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது.

தந்தையுடனான பிரச்னைகள் முடிவுக்கு வரும். தந்தையின் உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

பெண்களுக்கு அஷ்டம சனி முடிவதால் மாதவிடாய் கோளாறுகள், சிறு வாகன விபத்து, வீண் செலவு என பிரச்னைகள் வந்து போகும்.

அதே சமயம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் முன்னெடுத்த பணிகளில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். அலுவலகம் செல்பவர்களுக்கு பதவியும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அருமையான காலமாக இருக்கும்.