பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க ஒருநாளைக்கு சித்ரா எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? பாஸ்போர்ட் மூலம் வெளிவந்த அதிர்ச்சி உண்மை இதோ !

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சித்ராவின் மரணம் தற்கொலை என காவல்துறை அறிவித்த நிலையில், அவரது கணவர் ஹேம்நாத், பெற்றோர், சக நடிகர்கள் என பலரிடம் விசாரித்த பொலிசார் சில முக்கிய விடயங்களை சுட்டிகாட்டியுள்ளனர்.

சாதாரண பெண்ணாக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளினியாக நுழைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக தோன்றியது முதல் புகழின் உச்சிக்கு சென்ற சித்ராவுக்கு, வருமானமும் உயரத்தொடங்கியுள்ளது.

சீரியலில் நடிக்க அவருக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், விளம்பரதாரர் நிகழ்ச்சி, கல்லூரி மற்றும் கடை திறப்பு விழாக்கள் என இரவு பகல் பாராது தன்னுடைய நிகழ்ச்சிகளுக்காக உள்ளூர் மட்டுமில்லாமல், திரைகடல் ஓடியெல்லாம் லட்சங்களை சம்பாதித்துள்ளார்.

அந்தவகையில் அவர் குறுகிய காலத்தில் நம்பமுடியாத வகையில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பது, அவரது பாஸ்போர்ட் மூலமாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து சொந்தமாக பங்களா வீடு ஒன்றை கட்டியுள்ளார் சித்ரா. இதன் இறுதி கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஆடி கார் ஒன்றையும் விலைக்கு சித்ரா வாங்கியுள்ளார்

அன்றில் இருந்து தான் ஆரம்பித்துள்ளது அவருக்கான மனநெருக்கடி என்று கூறுகின்றனர். வீடுகட்டவும், காருக்காண தவணை தொகை செலுத்தவும் அவருக்கு பணத்தேவை அதிகரித்த நிலையில் சீரியல் தொடங்கி கலை நிகழ்ச்சி வரை அனைத்தும் கொரோனாவால் முடங்கியது.

சேமிப்பு பணத்தை வைத்தும் தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர்கள் மூலமும் நிலைமையை சமாளித்து வந்துள்ளார் சித்ரா.

இதற்கிடையில் தான் ஹேமந்துடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஹேமந்தின் நடத்தை தெரியவந்ததால் இரவு பகலாக மகள் சம்பாதிக்கும் பணம் ஹேமந்துக்கு செலவழிக்கப்படுவதை சித்ராவின் தாய் விரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் கடந்த அக்டோபர் மாதம் 19ம் திகதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பிப்ரவரி மாதம் நடக்க இருந்த திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் அதனை நிறுத்த தாய் முயன்றதாகவும் கூறப்படுகின்றது.

சித்ராவிடம் வருமானம் தொடர்பாக அவரது தாய் கணக்கு கேட்டதாலும், ஹேம்நாத் குறித்து கடுமையாக விமர்சித்ததாலும் ஏற்பட்ட மன உளைச்சலால், வீட்டிற்கு செல்வதை தவிர்த்து ஹொட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார் சித்ரா.

ஏற்கனவே ஒரு முறை தனது திருமணம் நின்று போன நிலையில், இரண்டாவது முறையும் தனது திருமணம் நின்று போனால் என்ன செய்வது என்ற குழப்பமும், பரிதவிப்பும் அவருக்கு கடுமையான மன அழுத்தத்தை கொடுத்த நிலையில் சில தனிப்பட்ட விவகாரங்களாலும் சித்ரா இந்த சோகமான முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.