நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக பெரம்பலுார் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என பொலிசார் விசாரிப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் நடிகை சித்ரா நட்சத்திர ஹொட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொலிசாருடன் சேர்ந்து இவரது தற்கொலை குறித்து, திருவள்ளூர் ஆர்.டி.ஓ, விசாரணையும் நடத்தி வருகிறது.

சித்ராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷிடம் பொலிசார் விசாரித்தனர். அப்போது, சித்ராவின் நட்பு வட்டத்தில், பெரம்பலுார், புதுக்கோட்டையைச் சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, நடிகை சித்ரா, பெரம்பலுாருக்கு எந்த திகதியில் வந்தார், அங்கு பங்கேற்ற விழா, திரும்ப எப்போது சென்னை புறப்பட்டு சென்றார், யார் யாரெல்லாம் அவரை சந்தித்தனர் என்று விசாரித்தனர்.

பெரம்பலுார் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அவரை சந்தித்தனரா என்பது குறித்தும், பெரம்பலுார் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் உளவுத்துறை போலீசார் விசாரித்து சென்றுள்ளனர்.