வைரலாகும் சித்ரா பேசிய பழைய வீடியோ…வீடியோவில் சொன்னது இதுதான்….மனதை பதைபதைத்த அந்த வீடியோ உங்களுக்காக இதோ

தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகையான சித்ரா, முன்பு நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையில்லை என்று பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சீரியல் பிரபலமான நடிகை சித்ரா சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது கொலையா? தற்கொலையா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சித்ராவின் ரசிகர்கள் அவர் தொடர்பான பல வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், சித்ரா பேசிய வீடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அதில், சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு வரும் பிரச்சனைகளைப் பற்றி எனக்கு தெரியும். அதை என்னால் எப்படி சமாளிக்க முடியும் என்பதும் தெரியும்.

நான் தைரியமான பொண்ணு. தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம். அந்த செயலை நான் எப்போதும் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் இந்த பீல்டில் இருக்கும் போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடும் போது, பலர் என்னை மட்டும் அல்லாமல் என்னை போல சினிமா துறையில் இருக்கும் பலருக்கும் மிரட்டல் விடுத்தும் தப்பான நோக்கத்தோடும் பேசியிருக்கிறார்கள்.