ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட் கூறிய சிவா ? நீங்களே பாருங்க !

இந்திய சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 70வது பிறந்தநாள். கடந்த 2 நாட்களுக்கு முன்பில் இருந்தே கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

பிரதமர் மோடி முதல் அனைவரும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி அவர்களை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கிவரும் சிவா அவர்களும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அதோடு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அண்ணாத்த படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15ம் தேதி தொடங்குகிறது என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.