சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விஷயம் தான் தற்போது வரை தினமும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது.

இவரின் இறப்புக்கு பலரும் பல கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சித்ராவின் தோழியான நடிகை ரேகா நாயர் அளித்திருக்கும் பேட்டியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அதில், சித்ராவின் கணவர் ஹேம்நாத் நல்லவர் இல்லை. புகழ் மற்றும் பணத்துக்காகத் தான் சித்ராவை காதலித்தார்.

அவரை தொழிலதிபர் என்று சொல்கிறார்கள். ஆனால், அவன் ஒரு சட்டை வாங்கும் அளவிற்கு கூட அவனிடம் பணம் இல்லை. கல்யாணம் ஆகாத பெண்கள் தான் அவனோட டார்கெட்.

அவனுக்கு பெரிய ஆட்களின் நட்பு உள்ளது. சில அமைச்சர்களின் மகன்களுடன் அவன் தொடர்பில் இருக்கிறான்.

மேலும், அவன் அவ்வளவு பெரிய ஆள் இல்லை.. அவன் சென்னை பையன் எல்லாம் இல்லை.. கூட்டத்தோடு நிக்குற ஒரு அல்ல கை தான் அவன். இன்னும் சொல்ல போனால், குடிக்கிறவங்களுக்கு டம்ளர் எடுத்துகொடுக்குற ஒரு கேரக்டர் தான் அவன்.

அந்த வழியில் தான் அவன் சித்ராவிடம் நெருங்கி பழகி, காதலாக மாற்றி இருக்கான் என கூறியுள்ளார். இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் வெளியே வருவாங்க எனவும் கூறியுள்ளார்.