பாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா?இதோ உங்களுக்கான தகவல்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

இதைபோல் தான் அதன் தோலிலும் நன்மைகள் அடங்கியுள்ளன. இது சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது.

முகப்பரு, கருவளையம் போன்ற சரும பிரச்சினைக்கு தீர்வாக அமைகின்றது.

அந்தவகையில் வாழைப்பழத்தின் தோலை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

பால், வாழைப்பழத் தோல் இரண்டையும் சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
வாழைப்பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக மசித்துக் கொள்லுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.
பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழை பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.
பால், வாழைப்பழத் தோல் இரண்டையும் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் ஒருதடவை இப்படி செய்தால், முகப்பருக்களை போக்கலாம்.
பால், வாழை பழத்தோல் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகப்பரு பிரச்சினையால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இது உதவும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மேற்கண்ட கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
பால், வாழை பழத்தோல் இக்கூழை தடவி 15 நிமிடம் ஊறவிட்டு பின் கழுவினால் சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம்.